"யாதும் ஊரே, யாவரும் கேளிர்"

என்ற மகுடவாசகத்திற்கு முற்றிலும் உண்மையாகத் தன் வாழ்நாள் முழுவதும் இயங்கி, உலக நாடுகளிலெல்லாம் தமிழின் தொன்மை வரலாற்றையும் சிறப்பையும் பரப்பிய ஈழத்தவரான தனிநாயக அடிகளாரினால் தமிழியல் உலகநாடுகளில் நிலைபேறடைந்தது. அடிகளாரின் சிந்தனையில் தோற்றம்பெற்ற அறிவுச்செல்வங்களான Tamil Culture ஆய்விதழ், International Association of Tamil Research (IATR) என்கிற உலகத் தமிழாராய்ச்சி மன்றம் நடாத்திய தமிழாராய்ச்சி மாநாடுகள், உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் வெளியிடப்பட்ட Journal of Tamil Studies ஆய்விதழ் ஆகியவற்றினை ஆவணப்படுத்துமிடமாக இவ்வலைத்தளம் இயங்கும்.

Learn more »

Tamil Culture

1952 மாசி மாதத்தில் தனிநாயக அடிகளாரினால் ஆங்கில மொழியில் வெளியிடப்பட்ட முதலாவது இதழுடன் Tamil Culture ஆய்விதழின் வரலாறு தொடங்குகிறது. 1952-1966 இடைப்பட்ட காலத்தில் 44 இதழ்கள் வெளியாகியுள்ளன. 1960, 1962, 1965 ஆகிய மூன்று ஆண்டுகளில் Tamil Culture வெளியிடப்படவில்லை. Tamil Culture ஆய்விதழில் உலக நாடுகளில் பலவற்றிலுமிருந்து ஆராய்ச்சித்துறையில் ஈடுப்பட்டிருந்த 121 ஆய்வாளர்கள் தங்கள் பங்களிப்பினைச் செய்துள்ளார்கள்.

Learn more »

IATR

Tamil Culture ஆய்விதழின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தமிழியல் ஆய்வாளர்களை நேரடியாக ஒருங்கிணைக்கும் களமாக உலகத் தமிழாராய்ச்சி மன்றம் - International Association of Tamil Research (IATR) 1964ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. இதன் தொடர்ச்சியாக சில நாடுகளில் மன்றத்தின் தேசியக் கிளைகளும் உருவாக்கப்பட்டது. முறையான உலகத் தமிழாராய்ச்சி மன்றமானது (legitimate IATR) இதுவரையில் எட்டு உலகளாவிய தமிழாராய்ச்சி மாநாடுகளை நடாத்தியுள்ளது. இலங்கைக்கிளை தேசிய அளவிலான இரண்டு மாநாடுகளை 1976, 1983 அகிய ஆண்டுகளில் நடாத்தியுள்ளது.

Learn more »

Journal of Tamil Studies

தனிநாயக அடிகளாரினால் நடாத்தப்பட்ட Tamil Culture ஆய்விதழின் தொடர்ச்சியாக உலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினால் Journal of Tamil Studies ஆய்விதழ் வெளியிடப்பட்டது. 1969 ஏப்பிரலில் முதலாவது இதழும், 1969 ஒக்டோபரில் இரண்டாவது இதழும் இறுதியாக 1970 மே மாதத்தில் மூன்றாவது இதழும் வெளியாகியுள்ளன. பதினொரு நாடுகளைச் சேர்ந்த 29 ஆய்வாளர்கள் தங்கள் பங்களிப்புகளைச் செய்துள்ளார்கள்.

Learn more »