Contact
Viruba Kumaresan alias T. Kumaresan
138, Bar Maniam Lane, Tellippalai, Jaffna, Sri Lanka.
விருபா குமரேசன்
138, பார் மணியம் வீதி, தெல்லிப்பளை, யாழ்ப்பாணம்.
Mobile : +94-777191056
WhatsApp : +91-9840254333
Support : t.kumaresan@viruba.com
தாய்மொழிக்கான உலக நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இந்நாளில் என் தாய்மொழியான தமிழ்மொழி தொடர்பில் மிகச் சிறந்த சிந்தனையும் செயலணியுமாகிய அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றத்தினை இணையம்வழி ஆவணப்படுத்தும் முகமாக என்னால் உருவாக்கப்பட்ட http://www.iatr.net என்ற இணையதளத்தினை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவதில் பெருமகிழ்ச்சியடைகிறேன்.
நீண்ட நெடுங்காலமாக தமிழர்களின் மரபுவழித் தாயகமாக அறியப்பட்ட யாழ்ப்பாணத்தினைப் பிறப்பிடமாகவும், தமிழைத் தாய்மொழியாகவும் கொண்ட தமிழ்ப் பெற்றோருக்குப் பிறந்த எனக்குத் தாய்மொழி தமிழ் ஆகும். தாய்மொழியான தமிழ் தொடர்பில் ஒரு ஆவணப்படுத்துல் முயற்சியினைச் செய்வதற்கு எனக்குப் பிறப்பால் கிடைத்த உரிமைகள் போதுமானவையே.
சட்டப்படியான (Legitimate) அனைத்துலகத் தமிழாராய்ச்சி மன்றம் 2010 ஆண்டுடன் அதன் செயற்பாடுகளை நிறுத்திவிட்டது. மன்றத்தின் யாப்பு ஏற்றுக்கொள்ளாத நிர்வாகம் சட்டப்படியானதல்ல என்பதனாலேயே இன்று இரண்டு அணிகளாகப் பிளவுபட்டுள்ளார்கள். இவ்விரு அணிகளின் முதன்மை நோக்கம் தமிழ் ஆராய்ச்சியல்ல என்பதற்கு அவர்களது செயல்களே சான்றாகின்றன. பின்கதவு வழியாக இணைந்த இப் போலிகளிடமிருந்து மன்றத்தின் நற்பெயரைக் காப்பாற்றுவதற்கான முயற்சியாகவே இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
2010 ஆண்டு தொடக்கிய ஆவணப்படுத்தும் இம்முயற்சி, 2023 தைப்பூச நாளில் இணையதளமாக இயங்கத் தொடங்கியது. சோதனை ஓட்டங்கள் முடிந்த நிலையில் இன்று இதனைப் பொதுவில் அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். எனது இம்முயற்சிக்குப் பல நண்பர்கள் பல்வேறு நிலைகளில் பேருதவி புரிந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் என் உள்ளார்ந்த நன்றி.
இணையதளம் முற்றும் முழுதான நிலையை இன்னமும் அடையவில்லை, மேலும் பல பக்கங்கள் இணைக்கப்படவுள்ளன, இது விரைவில் நிகழும். எமது கவனத்திற்கு அகப்படாத தவறுகள் அல்லது விடுபடல்கள் இருப்பின் தயவுசெய்து அறியத் தாருங்கள், நாம் திருத்தங்களைச் செய்வதற்குத் தயாரகவே உள்ளோம்.
2023.02.21